--- --:--:-- --

கோவை : ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் !!!

கோவை : ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் !!!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை மூலமாக கோவை தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் 2.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.114.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டுவதற்க்கு காணொளி காட்சிமூலம் அடிக்கல் நாட்டினார்.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜூனன்,தகவல் தொழில் நுட்பப்பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன்,எல்காட் கிளை மேலாளர் தனலட்சுமி,கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கே.ஆர்.ஜெயராமன்,சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சிங்கை முத்து உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon