சென்னையில் சாலையில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்..!
சென்னை நங்கநல்லூரில் சாலையில் 10 அடி பள்ளத்திற்குள் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நங்கநல்லூர் ஒன்றாவது பிரதான சாலையில் காலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழியாக வாகனங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. சாலையின் மையப்பகுதியில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் இரு பகுதிகளிலும் மழைநீர் வடிகால்வாய் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக மழை நீர் வடிகால் அல்லது கழிவு நீர் வடிகாலில் வாயையுடையசுவர் உடைந்து அதன் வழியாக மண் அரித்து செல்லப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.






