பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடக நடிகை சித்ரா தற்கொலை..!
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களில் அவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் தற்போது நசரத்பேட்டை உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவான்மையூர் பகுதியை சேர்ந்த சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா என்பவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார்நட்சத்திர ஹோட்டலில் சுமார் 2 மணியளவில் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்துள்ளார். ஹேமந்த் உடன் ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார். தான் குளிக்க வேண்டும் எனக் கூறி ஹேமந்தை வெளியே அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் ஹேமந்த் அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதையடுத்து அறையைத் தாழிட்டு கொண்டு குளிக்க சென்ற அவர் வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் ஹேமந்த் கதவைத் திறந்து பார்த்து உள்ளார்.
அப்போது கதவு திறக்காததால் அறையின் ஊழியரை வரவழைத்து அதை திறந்து பார்த்தபோது அறையில் சித்ரா தனக்குத்தானே புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.






