--- --:--:-- --

தமிழகத்தில் தொடர்ந்து இன்று136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 1330 பேர் டிஸ்சார்ஜ்..! 13 பேர் உயிரிழப்பு!!

dsfgd

தமிழகத்தில் இன்று 1260 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். 1330 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த பல நாட்களாகவே தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 1236 ஆக மேலும் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7, 92,788 ஆக அதிகரித்துள்ளது.

 

மேலும் தமிழகத்தில் நேற்று 16 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,822 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் இன்று 333 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மட்டும் 2,18,198 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 122 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை, இரட்டை இலக்கங்களில் பதிவான நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக ஒருவருக்கு கூட தொற்று இல்லை.

 

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.70 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,588 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 1.26 கோடி பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon