புற நோயாளிகளுக்கு இரட்டை இலை சின்னம்..!
புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகளுக்கு இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட வெளிநோயாளர் சீட்டு வழங்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
தகவலறிந்து அங்கு திரண்ட திமுகவினர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட ஓபி சீட்டு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து அறந்தாங்கி சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமாரிடம் கேட்டபோது வெளிநோயாளிகள் சீட்டு பற்றாக்குறையால் அருகே இருந்த அச்சகத்தில் அதில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பேப்பர்களை வாங்கி வந்து பயன்படுத்தியதாகவும் அதில் மறுபுறம் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதை சுகாதார பணியாளர்கள் சரியாக கவனிக்கவில்லை என்றும் கூறினார்.
தவறுக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜயகுமார் கூறியுள்ளார்.






