எங்கள் சாதியான “கடையன்” சாதியினை தேவேந்திரகுல வேளாளர் என ஒற்றைப் பெயருடன் இணைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டங்கட்டியர் கடையர் பேரவையின் தலைவர் ஏ கோபு, செயலாளர் பு ஜோசப், பொருளாளர் மு கேம்ஸ், தலைமையில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியதாவது:-தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் பிற பகுதிகளிலும் முக்கியமாக அதிகமாக வசிக்கக்கூடிய இராமநாதபுரம் மாவட்டத்தில் கடையன் சாதியினை தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் இணைப்பது குறித்து கோரிக்கைகள் சில அரசியல் தலைவர்களால் எழுப்பபடுவதையும் அதுகுறித்து தற்போது தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று செய்ததை நாங்கள் அறிய வந்துள்ளோம்.
அரசு மட்டங்கள் பரிசீலனை செய்து வருவதையும் நாங்கள் அறிய வந்துள்ளோம் கடந்த 04-03- 2019 இல் வெளியிட்ட அரசாணையின்படி விஷயம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்ட செய்தியும் வெளியாகியுள்ளது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டு மீன்பிடித் தொழில் செய்து வரும் எமது மக்களை தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் சேர்க்கக் கூடாது என்று கடந்த 2011 முதல் இதுநாள் வரையில் தமிழ்நாடு முழுவதும் எமது மக்கள் சார்பில் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
மேலும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி தூத்துக்குடி இராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கடற்கரைப் பகுதிகளில் கடலை மட்டுமே நம்பி எமது மக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் மீன்பிடித் தொழில் மற்றும் ஐரோப்பியர் கால குறிப்புகளின் படி கடையர்கள் மீன்பிடித் தொழில் செய்யும் மக்களாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் பன்னெடுங்காலம் கடையர் மக்கள் முக்குளித்தலில் ஈடுபட்டு வந்ததற்கான வரலாற்று சான்றுகள் ஏராளம் உள்ளன மீன்பிடித் தொழிலோடு சங்கு குளித்தல் சார் வேர் சேகரித்தல் சுண்ணாம்பு நீற்றல் போன்ற தொழில்களில் எமது மக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் கடலையும் கடற்கரையையும் சார்ந்து பல்லாண்டுகள் வாழ்ந்து வந்த கடையர் மக்களுக்கும் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயருக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பது வரலாற்று உண்மையாகும்.
சமூகம் பண்பாடு தொழில் திருமண உறவுகள் மானுடவியல் கூறுகள் வரலாற்றுத் தொடர்ச்சி போன்ற அம்சங்கள் எவற்றிலும் ஒட்டுறவு இல்லாத இரண்டு வெவ்வேறு சமூகங்கள் இணைப்பது என்பது பெரும் குழப்பங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் அமைதிச் சீர்குலைவை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்துவடும் என்பதை எமது மக்கள் சார்பில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தேர்தல் லாபங்களுக்கான எண்ணிக்கை பெரும்பான்மை அரசியலில் எமது மக்கள் சார்பில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் தேர்தல் லாபங்களுக்கான எண்ணிக்கை பெரும்பான்மை அரசியலில் எமது மக்கள் பலியாக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை ஏற்கனவே கல்வி பொருளாதாரம் தொழில் மேம்பாடு வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் எமது மக்களின் விருப்பத்திற்கு மாறாக எண்ணிக்கையில் பெருமையில் உள்ள சமூகத்துடன் இணைக்கப்பட்டால் அதிகாரப் பகிர்வில் பன்னெடுங்காலம் பங்கு பெற முடியாமல் பரிதவித்து வரும் எமது கடையன் சாதி மக்கள் முற்றும் முழுவதும் தொன்மையையும் வேரறுக்கும் செயலாக அமைந்துவிடும்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வாழ்ந்து வரும் எமது சமூகத்தில் இந்து கடையர்களை அட்டவணை சாதிகளில் கடையன் என்று 26வது இடத்தில் குறிப்பிட்டுள்ளதோடு கிருத்தவ கடையர்கள் பிற்பட்டோர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளோம் தனித்தன்மையோடு வாழ்ந்து வந்த எமது மக்களில் ஒரு பிரிவினர் கி.பி.1542 -ல் பிரான்சிஸ் சேவியர் என்பவரால் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் கொம்புத்துறை (கடையக் குடி ) என்ற கடற்கரை சிற்றூரில் சமய மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் வரையிலான கடற்கரை ஊர்களில் எமது மக்கள் கிறித்தவ சமயத்திற்கு மாறியுள்ளதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது இந்து மதம் கிறித்தவ மதம் என எந்த சமயத்தில் இருந்தாலும் கடையன் என்ற தனித்தன்மையான சாதி அடையாளத்துடன் மட்டுமே எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் தேவேந்திரகுல வேளாளர் என்ற எமக்கு தொடர்பில்லாத பெயர் எமது மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடும்.
வரலாற்றில் எந்த காலத்திலும் எமது மக்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் சூட்டப்பட்டதில்லை பட்டங்கட்டியர் என்ற குலப்பெயர் மட்டுமே எமக்கு வழங்கப்படுகிறது எங்களுக்கு தொடர்பில்லாத பெயர் எமக்கு சூட்டபடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை (the Government of India scheduled caste) order 1936 என்ற ஆங்கில அரசின் அரசாணையில் (The Gazette of India June 6 1936) தேவேந்திர குலத்தான் காலாடி குடும்பன் பள்ளன் பன்னாடி போன்ற பெயர்களோடு எமது கடையர் சாதி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்காலங்களில் தேர்தல் அரசியலுக்காக எங்களது மக்களின் விருப்பமின்றி தேவேந்திரகுல வேளாளர் என்ற வளையத்திற்குள் சிக்க வைக்கப் படுகின்றோம் வரலாறு தொன்மம் பண்பாடு தொழில் முறை மக்கள் விருப்பம் போன்ற எவற்றையும் கணக்கிலெடுக்காமல் சில அரசியல்வாதிகளின் விருப்பத்திற்காக மட்டுமே கடையர் சாதி மக்கள் பலி கடவாக்கப்பட்டுள்ளனர் தமிழ்நாட்டின் நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சை போன்ற மாவட்டங்களில் கடலைச் சார்ந்தும் பிற பகுதிகளில் தனித்தன்மையோடும் கடையர் என்ற பெயரில் வாழ்ந்து வரும் எமது ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒற்றை அடையாளத்தில் இணைக்கப்படுவதில் துளியளவும் விருப்பமில்லை என்பதை என்று இந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக தேவேந்திரகுல வேளாளரில் எங்களது சாதியான கடையின் சாதியினை இணைத்து இதனுடன் ஒற்றை பெயருடன் சேர்க்கக்கூடாது என்று சென்னை கிளை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.







