பெங்களூரில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணனை சந்தித்து ஆசி பெற்ற ரஜினி..!
ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணனை சந்தித்து ஆசி பெற்றார் . பெங்களூருக்கு சென்றுள்ள அவர் 14ஆம் தேதி வரை அங்கு தங்கியிருந்து புதுக்கட்சி தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க உள்ளார்.
இதனால் 12 ஆம் தேதி தனது பிறந்த நாளை பெங்களூருவில் உள்ள அண்ணன் சத்யநாராயணன் வீட்டிலே கொண்டாட இருப்பதாக கூறப்படுகிறதே. ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் 15ஆம் தேதி கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.







