தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







