--- --:--:-- --

ஆட்டநாயகன் விருது நடராஜனுக்கு கிடைத்திருக்கவேண்டும்..!

4

ஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வான ஹர்திக் பாண்டியா தமிழக வீரர் நடராஜனுக்கு அந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

இறுதிகட்டத்தில் 22 பந்துகளில் 42 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விருதைப் பெற்றுக் கொள்ள வந்தபோது பேசிய அவர் பவ்லர்களுக்கு சவாலான இந்த ஆடுகளத்தில் சிறப்பான பந்து வீசிய நடராஜனே இந்த விருதுக்கு பொருத்தமானவர் என கூறியுள்ளார்.

 

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon