--- --:--:-- --

இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்..!

8

கொரோனா சூழல், அதிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி பயன்பாடு ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

 

காணொளி வழியாக நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர்.

 

அப்போது பேசிய மோடி கொரொனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றிபெறும் என நமது அறிவியலாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்தார். அடுத்த சில வாரங்களில் தடுப்பு மருந்து தயாராகிவிடும் என வல்லுனர்கள் கூறியுள்ளதாகவும் ஒப்புதல் கிடைத்தவுடன் தடுப்பூசி போடப்படும் பணிகள் இந்தியாவில் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

மருத்துவத் துறையினரும், களப்பணியாளர்கள் கடும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியோர் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார். தடுப்பூசியின் விலை குறித்து மாநில அரசுகளுடன் பேசி வருவதாகவும் மக்களின் நல வாழ்வுக்கு முன்னுரிமை கொடுத்து இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் இந்தியா ஏற்கனவே அனுபவம் மிக்கது என்றும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என மத்திய மாநில அரசுகளின் குழுக்கள் கலந்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon