--- --:--:-- --

இன்று மதுரையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

6

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மதுரையில் தற்போது உள்ள ஆட்சியர் அலுவலகம் கடந்த 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

 

அனைத்து அலுவலகங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 4.43 ஏக்கர் பரப்பளவில் 30 கோடி ரூபாய் செலவில் வெள்ளை நிறத்தில் கண்ணைக் கவரும் வகையில் காட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்.

 

மேலும் அம்ருத் திட்டத்தின் கீழ் 1,295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் கொண்டு வரும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon