விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் நாளை ஆர்ப்பாட்டம்..!
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அந்த கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
காணொளி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்புக்கொடி ஏந்தி நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முக ஸ்டாலின் தலைமை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






