ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மினி லாரியில் சிக்கியிருந்த நபர்கள் மீட்பு..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மினி லாரியில் சிக்கி இருந்த நபர்களை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அட்டைப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி சித்தராஜ கண்டிகை அருகே தரை பாலத்தை கடக்க முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி கொண்டிருந்த வெள்ளத்தில் சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டது.
ஓட்டுனர் உட்பட மேல் அறையில் இருந்த 5 பேரும் ஆபத்தான நிலையில் காரின் மேற்கூரையில் ஏறி அமர்ந்தனர். அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் 5 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.






