சக்கராசனம் செய்தபடியே காரை இழுத்து சென்று சாதனை படைத்த மாணவன்..!
விருதுநகரை சேர்ந்த மாணவனொருவன் யோகாசனம் செய்தவாறு கார் ஒன்றை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். சிறுவன் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
யோகாசனத்தில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ள சிறுவன் 150 கிலோ எடையுள்ள கார் ஒன்றை கயிறு மூலம் தனது இடுப்பில் வைத்து சக்கராசனம் செய்தபடியே 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று புதிய சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனை நோபல் வர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.






