--- --:--:-- --

பணியின் போது மதுபோதையில் இருந்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம்..!

10

ரியலூரில் பணியின் போது மதுபோதையில் இருந்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரிய நாகலூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமனும், காமரசவல்லி கிராம நிர்வாக அலுவலர் சிவாவும் நண்பர்கள்.

 

இருவரும் பெரிய நாங்களும் ஊராட்சிமன்ற அலுவலகத்திலேயே மது அருந்தியதாக புகார் எழுந்துள்ளது. நேற்று இவர்கள் இருவரும் அலுவலகத்தில் மதுபோதையில் கூச்சலிட்டனர். அதைக்கேட்ட பொதுமக்களையும் ஆபாசமாக திட்டி உள்ளனர்.

 

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கிராம நிர்வாக அலுவலர்களை அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்துப் பூட்டி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பணி நேரத்தில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon