நீதிமன்ற ஊழியர்களை விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது..!
நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை காணொளி வெளியீட்டு விமர்சனம் செய்வதாக ஓய்வுபெற்ற நீதிபதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஏற்கனவே இரு முறை காவல்துறையினர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் காவலர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை அடுத்த ஆவடி அருகே மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.







