மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரம் திரையரங்குகளில் திரையிட திட்டம்..!
மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரம் திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலன்று அந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுருந்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சி நடப்பதாக தகவல் வெளியானது.
இருப்பினும் அந்த படத்தை திரையரங்குகளில் தான் திரையிட வேண்டும் என நடிகர் விஜய் கண்டிப்புடன் தெரிவித்ததால் படத்தை திரையரங்கில் வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் அண்மையில் அறிவித்தார்.
இந்த நிலையில் படத்தை பிரம்மாண்டமாக ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட முடிவெடுத்து அதற்காக வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரம் திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளிவந்தால் பொங்கலுக்கு மற்ற நடிகர்களின் படங்கள் திரைக்கு வர முடியாத நிலை ஏற்படும்.







