--- --:--:-- --

துணிப்பையில் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்ட வனத்துறையினர்..!

5

ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் துணி பையில் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்டு வனத்துறையினர் காட்டில் விட்டுள்ளனர்.

 

இது மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுவதாகவும் இதனால் மண்ணுளி பாம்புக்கு லட்சக்கணக்கில் விலை கிடைக்கும் என்று பரவும் தவறான தகவலால் அதை கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

 

ஒதுக்குப்புற பகுதியில் துணிப்பையை ஒருவர் வைத்துவிட்டு சென்றது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தியதில் பாம்பு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் வந்து பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்

 

Leave a Reply

Right Menu Icon