--- --:--:-- --

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு ஆளானோர்1459 பேர்… 6 மாதத்துக்கு பின் ஒற்றை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவு!!

5.1

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 1459 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில், தினசரி உயிரிழப்பு 6 மாதத்துக்கு பின் முதன் முறையாக ஒற்றை இலக்கத்தில் 9 ஆக பதிவாகியுள்ளது. இன்று 1471 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1459 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இரட்டை இலக்கத்த இருந்த தினசரி உயிரிழப்பு படிப்படியாக குறைந்த இன்று ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 703 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னையிலும் தினசரி கொரோனா பாதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 398 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1471 ஆகும். இன்னும் சிகிச்சையில் இருப்போர் 11 ஆயிரத்து 052 பேர் மட்டுமே எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

இன்று 67145 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த பரிசோதனை எண்ணிக்கை 1.19 கோடி எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon