இலங்கையால் பசியால் குப்பையை கிளறிய யானைகள்..!
இலங்கையில் காடுகளை அழிக்கும் நடவடிக்கை அதிகரிப்பதால் கும்மை பேட்டை கிளறி யானைகள் உணவு தேடும் காட்சி உலகம் முழுவதும் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக காடுகளை அழிக்கும் நடவடிக்கையில் அதிகரித்து வருகிறது.
இதனால் காட்டு யானைகள் வாழ்விடங்களை இழந்து உணவுக்காக ஊருக்குள் வரும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நிகழ்கின்றன. இலங்கையில் இதன் விளைவாக யானைகள், பன்றிகளை போல குப்பை மேடுகளில் சுற்றி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குப்பைமேட்டில் உள்ள பிளாஸ்டிக் அரிசி உணவுகள் ஆகியவற்றை உண்பதால் யானைகள் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கையில் 367 யானைகள் உயிரிழந்துள்ளனர். எனவே யானைகளை பாதுகாக்குமாறு சர்வதேச அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.






