நிவர் புயலால் புதுச்சேரியில் 400 கோடி ரூபாய் அளவிற்கு சேதம்..!
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் 400 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரிடர் மேலாண்மை துறையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது மாநில அரசானது இடைகால நிவாரணமாக மத்திய அரசிடம் நிதி உதவி கேட்டுமுதல் கட்டமாக 50 கோடி ரூபாய் நிவாரண பணிகளுக்கு கேட்க உள்ளதாக கூறியுள்ளார்.
மொத்த இழப்பீடு 400 கோடி ரூபாய் என்றுகணக்கிடப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை வந்த பிறகுதான் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.






