--- --:--:-- --

விழுப்புரத்தில் கடல் அரிப்பால் இடிந்து விழுந்த வீடு..!

7

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோவில் பகுதியில் கடல் அரிப்பால் பங்களா வீடு ஒன்றில் இடிந்து சேதம் அடைந்தது. சென்னையை சேர்ந்த தீனதயாளன் என்பவர் பெரிய முதலியார் சாவடி என்ற இடத்தில் நீச்சல் குளத்துடன் கூடிய பங்களா கட்டியிருந்தார்.

 

கடல் அரிப்பை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரைக்கு வீட்டின் உரிமையாளர் கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 10ஆம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

 

புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த சூழலில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தீனதயாளன் வீடு இடிந்து விழுந்தது.

Leave a Reply

Right Menu Icon