--- --:--:-- --

புதுச்சேரியில் முதலமைச்சரின் வீடும் தண்ணீரில் சூழ்ந்துள்ளது..!

6

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. நிவர் புயல் காரணமாக மழை புதுச்சேரியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது சாரல் மழை துவங்கியுள்ளது.

 

இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து புதுச்சேரியில் நகரப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் முக்கிய முதலமைச்சர் வீடு பகுதியான எல்லையம்மன் கோவில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

 

புதுச்சேரியின் அண்ணா சாலை, நேரு சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ள சாலைகளில் தண்ணீர் புகுந்துள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் கடற்கரை சாலையில் இருந்து நகர பகுதிகளான மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கான அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

 

குறிப்பாக புதுச்சேரி முதலமைச்சர் வசிக்கும் எல்லையம்மன் கோவில் நீரானது அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் வீடுகளில் தண்ணீர் வடிய துவங்கியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon