தமிழகத்தில் கரையை கடக்கப்போகும் நிவர் புயல்..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமாக கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்னர் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்த புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் தூரத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






