--- --:--:-- --

10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர்..!

3

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேன்கான் தெருவில் மருத்துவம் பார்த்து வந்த சங்கர் என்பவர் போலி மருத்துவர் என்று வந்த புகாரில் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த சங்கர் டாக்டர் என்று கூறி ஊசி போட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்து அவரை கைது செய்த போலீசார் மருந்து உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.

 

அதேபோல விவிஷ்ணபுரத்தை சேர்ந்த 63 வயது திரு ஞானம் மருத்துவம் படிக்காமல் வடக்கு வடகு தெருவில் மருத்துவமனை நடத்தி ஊசி போட்டு மருந்து கொடுத்து வந்ததை கண்டறிந்த போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon