தமிழகத்தில் இன்று மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு..!2112 பேருக்கு தொற்று உறுதி…! 25 பேர் உயிரிழப்பு…!
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பும் 25 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று தொற்று பாதிப்பு 565 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழப்பும் படிப்படியாகவே குறைந்து வருகிறது. இன்றைய நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நேற்று 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 2112 ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 153 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 25 ஆக பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2347 ஆகும்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7, 22, 686 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் சராசரி 92% மேல் உள்ள நிலையில் தற்போது 18 ஆயிரத்து 395 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 77,536 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் 2112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1 .08 கோடி பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 565 ஆக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.







