முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 2 ஆம் தேதி வகுப்புகள் தொடக்கம்..!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது இருக்கும் செய்தி குறிப்பில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களை வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இதர மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் இரண்டாம் தேதி திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும் என்றும் அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர பபிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழிக் கல்வி முறை தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.






