--- --:--:-- --

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என முதலமைச்சர் பச்சையாக பொய் கூறுகிறார்..!

11

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என முதலமைச்சர் பழனிசாமி பேசியது பச்சை பொய் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் வருவதற்கு முழு முதற்காரணம் அதிமுக ஆட்சிதான் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்குகிறது என்றதும் தூத்துக்குடி சம்பவத்திற்கு நான் தான் காரணம் என முதலமைச்சர் சொல்லும் நீளமான பொய்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

அரசு விழாக்களில் அரசியல் நாகரிகத்தை தூக்கி எறிந்துவிட்டு இப்படி எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற புகார்கள் கூறுவதை முதலமைச்சர் கைவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon