அமெரிக்காவில் கொரொனா பெருந்தொற்றை தடுக்க தமிழக பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..!
அமெரிக்காவில் புதிதாக வைக்கப்பட்டுள்ள கொரொனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பெருந்தொற்று தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இந்த குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் விவேக் மூர்த்தி இடம் பெற்றுள்ளார்.
இதே குழுவில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட பெண் மருத்துவரான செலின் ராஜ் இடம்பிடித்துள்ளார். இவர் நியூயார்க் பிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும், அமெரிக்க நாட்டின் காசநோய் தடுப்பு பிரிவில் துணை இயக்குனராகவும் பணிபுரிகிறார்.






