பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வங்கி காசாளர் ..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த வங்கி காசாளர் ஒருவர் பல பெண்களை வசியம் செய்து ஆபாச படம் எடுத்த வழக்கில் அவர் வீட்டில் இருந்த ஹார்டிஸ்க் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விராலிமலையில் உள்ள வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றிய ஜெயக்குமார் என்பவர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி அவர்களுடன் சேர்ந்து ஆபாசமாக படம் பிடித்து உள்ளார் என்பது பழக்கம்.
இதற்கான ஆதாரங்கள் உடன் ஜெயக்குமாரின் மனைவி தாட்சர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவரும் போலீசார் அவரை லால்குடி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தாம் அளித்துள்ள ஆபாச புகைப்படங்கள் மட்டுமின்றி மேலும் வீடியோக்கள் ஜெயக்குமார் வீட்டில் இருப்பதாக மணப்பாறை நீதிமன்றத்தில் தாட்சர் வழக்கு தொடர்ந்திருந்தார் .
இதனை பறிமுதல் செய்யவில்லை என்றால் சமூக வலைதளங்களில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் மணப்பாறையில் ஜெயக்குமார் வீட்டிலிருந்த ஹார்ட்டிஸ்க், 63 சிடி, ஐந்து பென்டிரைவ், ஆறு செல்போன், 9 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்த பின்னர் மேலும் பல தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு 3 முறை விண்ணப்பித்தும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.






