ஆன்லைனில் பாடம் எடுக்காததால் செமஸ்டெர் தேர்வில் கேள்வியையே பதிலாக எழுதிய மாணவர்கள்..!
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆன்லைன் மூலமாக பேராசிரியர் பாடம் நடத்தாததால் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் கேள்வியையே பதிலாக எழுதிக் கொடுத்துள்ளனர்.
அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கு அந்த துறையின் தலைவர் ஜெயக்குமார் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் வேறு வழியின்றி கேள்வியையே பதிலாக எழுதிக் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது பேராசிரியர் ஜெயக்குமாரிடம் இணைய வசதி இல்லாததால் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தவில்லை எனவும் இருப்பினும் பாடம் எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்க கோரி மூன்றாவது முறையாக ஜெயக்குமாருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.







