கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து பன்றிக் குட்டியைத் தூக்கி சென்ற சிறுத்தைப் புலி..!
கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தைப்புலி ஒன்று குடியிருப்புப் பகுதியில் புகுந்து பன்றிக் குட்டியைத் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காமராஜர் நகர் காலனி வாழைத்தோட்ட பகுதிகளை சுற்றியும் சிறுத்தைப்புலி ஒன்று வளர்ப்பு பன்றிகளை பிடித்துச் செல்வதே தொடர்கதையாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.






