--- --:--:-- --

மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி..!

9

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

பாரி நகரை சேர்ந்தவர் பூமாலை இரண்டு கிட்னியும் பழுதான இவருக்கு மாற்று சிறுநீரகத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக இவருடன் பழகிய அருளானந்த சாமி குடும்பத்தினர் கூறியதோடு அதற்காக 2016 ஆம் ஆண்டு 60 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமலும், பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பூமாலை அளித்த புகாரில் அருளானந்த சாமியை கைது செய்த காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் அவரது மனைவி, மகன் மகளை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon