பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பை போலீஸ் சம்மன்..!
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட விவகாரத்தில் வரும் பத்தாம் தேதி நேரில் ஆஜராகும்படி நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கங்கனா ரனாவத் அவரது சகோதரி ரங்கோலி ஆகிய இருவருக்கும் மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.






