--- --:--:-- --

காதலன் வருவதாக கூறி திருமணத்தை நிறுத்திய பெண்! தனக்கு காதலனே இல்லை என அந்தர் பல்டி..!

11

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தாலி கட்டும் நேரத்தில் காதலன் வருவதாக கூறி திருமணத்தை நிறுத்திய பெண் தனது காதலனே இல்லை என திடீர் பல்டி அடித்துள்ளார்.

 

வட்டக்கண்ணி கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண் கடந்த 29ஆம் தேதி மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் தனக்கு காதலன் இருப்பதாகவும் அவர் வந்து அழைத்துச் செல்வார் என்றும் கூறி திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்.

 

இந்த நிலையில் படுகர் மொழியில் பேசிய ஆடியோவை வெளியிட்டுள்ள அந்த பெண் தனக்கு காதலன் என்று யாரும் இல்லை என்றும் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தடுத்து நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். தற்போது பெற்றோருடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon