--- --:--:-- --

செல்போனை பிடிக்க முயன்றபோது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு..!

7

சென்னை அயனாவரம் அருகே கையில் வைத்திருந்த செல்போன் நழுவியதால் அதை பிடிக்கும் முயற்சியில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் பலியானார்.

 

நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த யாமினி கடந்த 25ஆம் தேதி நான்காவது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனி சுவற்றின் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் கையில் இருந்த செல்போன் நழுவியதால் தாவிப் பிடிக்க முயன்று மாடியில் இருந்து இடறி விழுந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர் இன்று உயிரிழந்துள்ளார். செல்போனை பிடிக்கும் போது தவறி விழுந்தாரா திருமண பேச்சு பிடிக்காமல் குதித்து விட்டாரா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon