தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: நேற்றை விட இன்று சற்று கூடுதல்..!2652 பேருக்கு தொற்று பாதிப்பு…! 35 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்து இன்று ,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று போல் இன்றும் உயிரிழப்பு 35 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6-வது நாளாக 3 ஆயிரத்திற்கு கீழாக பதிவாகியுள்ளது நேற்று 2516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று அதிகரித்து 2652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,19,403 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 4,087 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,83,464 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று போலவே இன்றும் கொரோனா பாதிப்பால் 35 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 10-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று மட்டும் 75,224 கொரோனா மாதிரிகளும், இதுவரை 98,08,087 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் 24,886 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






