--- --:--:-- --

 நவம்பர் 1ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்..!

11

மிழகம் மீட்போம் என்ற தலைப்பில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக கட்சியின் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை காணொளி காட்சியில் மு க ஸ்டாலின் தலைமையில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காணொளி வாயிலாக வரும் ஒன்றாம் தேதி ஈரோட்டில் தொடங்கும் இந்த சிறப்புப் பொதுக்கூட்டம் பத்தாம் தேதி விழுப்புரத்தில் நிறைவடைகிறது.

Leave a Reply

Right Menu Icon