--- --:--:-- --

வெளிநாட்டில் பக்கத்து அறை நண்பர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நபர்..!

2

வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

 

மஞ்சதோப்பை சேர்ந்த ஜார்ஜ் பேராத்தூரை சேர்ந்த கிறிஸ்டோபர் ஒப்பந்ததாரரிடம் சவுதி அரேபியாவில் கடந்த 6 ஆண்டுகளாக கட்டிட வேலை பார்த்தார். ஊதியத்தை கிரிஸ்டோபர் ராஜ் சரிவர வழங்குவதில்லை என்றும் ஜார்ஜ்க்கு 6 லட்சம் ரூபாய் வரை வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

கடந்த 22ஆம் தேதி மனைவியை போனில் அழைத்த கிறிஸ்டோபார் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக கூறி அழைப்பை துண்டித்தார்.

 

அதன் பின்னர் ஜார்ஜின் பக்கத்து அறை நண்பர்கள் மூலமாக அவர் அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்ததாகவும் கிறிஸ்டோபர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் கணவரின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் ஜார்ஜின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon