திருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்தி குத்து..!
திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் இளம் நடிகை மாளவி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழி திரைப்படங்களில் மாளவி மல்கோத்ரா நடித்துள்ளார்.
தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யோகேஷ் குமார் என்பவரிடம் நீண்ட நட்பாக பழகி வந்த நிலையில் அண்மையில் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பையில் வெர்சோவா பகுதியில் நேற்றிரவு அவரிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும் இதை ஏற்க மறுத்ததால் யோகேஷ் குமார் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் கொலை முயற்சி, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






