--- --:--:-- --

சடலத்தை சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!

9

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

அவரது உடலை இடுக்காட்டிற்கு கொண்டு செல்லும் போது அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்லதுரையின் உறவினர்கள் பட்டுக்கோட்டை – பேராவூரணி சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை விளைநிலம் வழியாக தூக்கி சென்றனர். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon