நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் விமானப் படைத் தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ள படக்குழு ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.






