மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது..!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.39 அடியாகவும், நீர் இருப்பு 64.05 டிஎம்சியாகவும் உள்ளது.
அணைக்கு நீர்வரத்து 17,129 கனஅடியாகவும் இருந்து 18,694 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 9 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ளது. 18 ஆயிரம் கன அடியிலிருந்து இருபது ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.







