ஏடிஎம்மில் சிதறிக்கிடந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு..!
சேலம் ஓமலூர் அருகே ஏடிஎம்மில் சிதறிக்கிடந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அபுல் அஜீஸ் மற்றும் சந்திரன் இருவரும் சேர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பண்ணப்பட்டியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் அங்கும் இங்குமாக சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து அந்த வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட நான்காயிரம் ரூபாய் உரியவரிடம் வழங்கப்படும் என்று வங்கி மேலாளர் கூறியுள்ளார்.







