--- --:--:-- --

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

6

துரை மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை நிர்வாகம் தரப்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என உயிரிழந்தோரின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

செங்குளம் கிராமத்தில் சண்முகராஜன் என்பவரது பட்டாசு தொழிற்சாலையில் நேற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தபோது வெடி மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறின. விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் நிகழ்விடத்திலும், இரண்டு பெண்கள் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

படுகாயமுற்ற சுந்தரமூர்த்தி என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும் படுகாயமுற்றோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

 

விபத்து பற்றி கல்லுப்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. சண்முகராஜன், மேலாளர் வைரமுத்து உள்ளிட்ட 3 பேர் மீது விபத்து நேரிடும் என தெரிந்து கவனக் குறைவாக இருந்தது என்பது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதனிடையே பட்டாசு ஆலை தரப்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Right Menu Icon