--- --:--:-- --

தனிமங்களின் வேதியல் குறியீடுகளை தலைகீழாக எழுதி மாணவி சாதனை..!

11

சென்னை பம்மலை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி 118 தனிமங்களின் வேதியல் குறியீடுகளை தலைகீழாக எழுதி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

 

ஒன்பதாம் வகுப்பு மாணவியான கயல்விழி சிறுவயது முதலே வேதியியல் பாடத்தில் கொண்ட ஈடுபாட்டால் வேதியியல் குறியீடுகளை பின் வரிசையிலிருந்து எழுதுவதற்கு பயிற்சி எடுத்துள்ளார்.

 

இதற்கு முன் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி 118 தனிமங்களின் குறியீடுகளை ஒரு நிமிடம் 42 விநாடிகளில் எழுதி சாதனை படைத்திருந்த நிலையில் மாணவி கயல்விழி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் தலைகீழாக எழுதி புதிய சாதனையை படைத்தார்.

Leave a Reply

Right Menu Icon