--- --:--:-- --

இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு எப்போது துவங்கப்படும்..!

9

ந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு எப்போது துவங்கப்படும் என விளக்கம் கேட்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2018 ல் தொடங்கப்பட்ட இந்த படம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

 

அதன்பிறகு கொரொனா ஊரடங்கால் மீண்டும் தடைபட கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் எந்திரன் 2 படத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்கிற ரீதியில் தயாரிப்பு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

 

இந்த நிலையில் பட்ஜெட்டை குறைக்க வேண்டுமென தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்துவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை எனவும் முழுமையான தளர்வுகள் கிடைத்ததும் படப்பிடிப்பு துவங்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon