வரும் 25-ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் நடிகர் அஜீத்..!
வலிமை படத்தின் படப்பிடிப்பில் வரும் 25-ஆம் தேதி முதல் அஜித் கலந்து கொள்ள உள்ளார். கொரொனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் படப்பிடிப்பை துவங்கினர்.
சென்னையில் எடுக்க வேண்டிய காட்சிகள் நிறைவடைந்ததால் தற்போது ஹைதராபாத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் 25 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளார்.
அவரோடு குமரேஷ், கார்த்திகேயா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனால் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.







