குமரியில் ஆற்றில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு..!
குமரி மாவட்டம் திருவட்டாரில் ஆற்றில் மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப் பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
திருவட்டாறு சப்பாத்து பகுதியில் உள்ள பரளி ஆற்றில் அந்த பகுதி இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக வலை விரித்த போது வழயில் மலைப்பாம்பு சிக்கியதை கண்டு வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதி இளைஞர்களின் உதவியுடன் வலையிலிருந்த 12 அடி நீள மலைப்பாம்பை மீட்டு காட்டுக்குள் விட்டனர்.







