--- --:--:-- --

சிறுவன் விளையாடிய பப்ஜி விளையாட்டால் பல லட்சத்தை இழந்த மருத்துவர்..!

9

ப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் உள்ள சூட்சியமம் தெரியாமல் பெற்றோரின் வங்கி கணக்குகளை சிறார்கள் காலி செய்யும் செய்திகளை அவ்வப்போது கேட்டு வருகிறோம். இந்த முறை வேலை கொடுத்த முதலாளியின் வங்கி கணக்கை பதம் பார்த்திருக்கிறார் பணிப்பெண்ணின் மகன்.

 

வயது முதிர்ந்த மருத்துவர் முருகேசன் தமக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பணிப்பெண்ணின் மகன் மொபைலில் தமது வங்கி கணக்கு தகவல்களை பதிவேற்றியுள்ளார். அதன் கடவுச்சொல்லை அறிந்து வைத்திருந்த அந்த சிறுவன் பப்ஜி விளையாட மருத்துவர் முருகேசன் வங்கிக் கணக்கை பயன்படுத்தி உள்ளான்.

 

எதிரணியை தாக்குவதற்காக தேவைப்படும் உயர்தர ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக மருத்துவரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி உள்ளான். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாய் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

மேலும் பப்ஜி விளையாடுவதற்காக தமது நண்பர்களுக்கும் அதே வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஒரு லட்சம் ரூபாய்க்கு மொபைல் போன்களும் வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

 

ஏழரை லட்சம் ரூபாயை இழந்து அந்த வயதான மருத்துவர் பேரனை போல் பார்த்த சிறுவன் என்பதால் தான் அளித்த புகாரை திரும்பப் பெற்று விட்டார். சிறுவனை காவல்துறையினரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon